

பிரான்ஸ்
இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் பிரச்சினை அவ்விரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த உலகையே பாதிக்கும் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், ஜி7 நாடுகளான பிரிட்டன், கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன.
தற்போது உலக அளவில் நிலவி வரும் வர்த்தக உறவு பிரச்சினை, பருவநிலைப் பேரழிவு, பாலின சமத்துவம், கல்வி ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளது.
இந்நிலையில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர் குறித்து கூறியுள்ளார்.
மோசமான விளைவு உருவாகும்
தற்போது உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள்ளே சுருங்கி வருகின்றன. பிற நாடு களுடன் நல்ல உறவை மேற் கொள்ள அவை முன்வருவ தில்லை. இது ஆரோக்கியமான போக்கு கிடையாது. இது மிக மோச மான விளைவையே ஏற்படுத்தும். உலக வளர்ச்சிக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும். அதை நோக்கி பயணிப்பதே நம்முடையே நோக்க மாக இருக்கவேண்டும். தற் போதைய சூழ்நிலையில் இருநாடு களுக்கிடையேயான மோதல் என் பது அவ்விரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.