Published : 25 Aug 2019 07:32 AM
Last Updated : 25 Aug 2019 07:32 AM

உலகின் முதலாவது மிதக்கும் அணு உலை அறிமுகம்: 21 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பலில் உருவாக்கியது ரஷ்யா

மாஸ்கோ

உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா நேற்று முன்தினம் அறிமுகம் செய்துள்ளது.

அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் பெரிய கப்பலை ரஷ்யா உருவாக்கி யுள்ளது. இதில்தான் அணு உலை பொருத்தப்பட்டு உலகின் முத லாவது மிதக்கும் அணு உலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த அணு உலையைத் தாங்கியுள்ள கப்பலானது நேற்று முன்தினம் ரஷ்யாவின் முர்மான்ஸ்க் என்ற துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலுள்ள சைபீரியாவுக்கு இந்த கப்பல் செல்லவுள்ளது. பருவநிலையைப் பொருத்து சுமார் 4 முதல் 6 வார காலங்கள் வரை இந்த அணு உலைக் கப்பலின் பயணம் அமையும்.

இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த அணு சக்தி அமைப்பான ரோசடோம் வட்டாரங்கள் கூறும் போது, “இந்த அணு உலையானது, மரபு வழி அணு உலைக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் பனிக்கட்டியால் இது மூடப்பட்டிருக்கும்.

இதுபோன்ற அணு உலைகள் பலவற்றைத் தயாரித்து வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் முடிவில் ரஷ்யா உள்ளது. அணு உலை உற்பத்தியில் இது மிகப்பெரிய புரட்சி” என்று தெரிவித்தன.

இதனிடையே இதுபோன்ற மிதக்கும் அணு உலைகளுக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் பனிக்கட்டி மீதான செர்னோபில் என்றும், அணுசக்தி டைட்டானிக் என்றும் வர்ணிக்கின்றனர்.

144 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணு உலை கப்பலைக் கட்டும் பணிகள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவுற்று பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த கப்பல் சைபீரியாவிலுள்ள சுகோட்கா துறைமுகத்துக்குச் செல்ல வுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் அணு சக்தித்துறையைச் சேர்ந்த கிரீன்பீஸ் ரஷ்யா அமைப்பின் தலைவர் ரஷித் அலிமோவ் கூறும் போது, “எந்த வகையான அணு உற்பத்தி நிலையமாக இருந்தா லும் அங்கிருந்து அணுக் கதிர் வீச்சு, அணுக்கழிவுகள் வெளிப் படும். அங்கு விபத்துகளும் ஏற்பட லாம். ஆனால் அகாடமிக் லோமோ னோசோவ் கப்பல், புயலையும் தாங்குமளவுக்கு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் 21 ஆயிரம் டன் எடை கொண்டது. 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 2 அணு உலைகள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x