இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீக்கம்: முப்படையினருக்கு சிறப்பு அதிகாரம்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீக்கம்: முப்படையினருக்கு சிறப்பு அதிகாரம்
Updated on
1 min read

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலில் நூற்றுக்கணக் கானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலை தற்போது நீக்கப் பட்டுள்ளது. எனினும் முப்படை யினருக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்படுவதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளார்.

தாக்குதல்

இலங்கையில் ஏப்.21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்கு தலில் இந்தியர்கள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிர வாதிகள் பொறுப்பேற்றனர். தாக்குதல் நடத்திய தீவிர வாதிகளுக்கு தலைவராக ஜஹ் ரான் ஹாசிமின் செயல்பட்டதாக வும், இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு தான் இத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் இலங்கை அரசு குற்றம்சாட்டியது. இதையடுத்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் ஏப்ர.24 முதல் அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கை காவல் துறைக்கு மட்டுமே இருந்த பல அதிகாரங்கள் ராணுவத்தினரின் வசமானது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதி களில் ராணுவ சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டன.

அதிபர் அறிவிப்பு

இந்நிலையில், இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை ஆகஸ்ட் 23-ம் தேதி அன்று நீக்கப்படுவதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அத்தபத்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இருப்பினும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்காக முப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். அவசர சட்டம் விலக்கப்பட்டுள்ள நிலையிலேயே, முப்படையினருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in