Published : 25 Aug 2019 07:17 AM
Last Updated : 25 Aug 2019 07:17 AM

மேற்கு ஆசிய நாடுகளிலேயே முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் ரூபே கார்டை அறிமுகப்படுத்தினார் மோடி: இருதரப்பு உறவை மேம்படுத்தியதற்காக அந்நாட்டின் உயரிய விருதை பெற்றார்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்கும் அந்நாட்டின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயான். படம்: பிடிஐ

அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் இந் தியாவின் ரூபே கார்டை அறிமுகப் படுத்தினார்.

இதன் மூலம் மேற்கு ஆசிய நாடுகளிலேயே ரூபே கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடாக ஐக்கிய அமீரகம் விளங்கு கிறது.

மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்டமாக நேற்று முன்தினம் பிரான்ஸுக்கு சென்றார்.

அங்கு அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரதமர் எட்வர்ட் சார்லஸ் ஆகியோரை மோடி தனித்தனியே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதை யடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜயீத் விருது

இந்நிலையில், இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று காலை சென்றார். தலைநகர் அபுதாபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

அதன் பிறகு, அபுதாபியில் பிரம் மாண்டமாக நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஜயீத் விருதினை அந்நாட்டு இளவரசர் முகமது பின் ஜயீத் அல் நயான் வழங்கி கவுரவித்தார்.

இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர், பல்வேறு வெளிநாடு களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத் துக்கு சென்ற மோடி, அந்நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர் களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணத் துக்கு பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் - இந்தியா இடையேயான உறவு பன்மடங்கு உயர்ந்தது. குறிப் பாக, தொழில், வர்த்தகம், பாது காப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இருந்து வந்த ஒத்துழைப்பு கணிசமாக அதிகரித்தது.

இரு தரப்பு நல்லுறவை அங்கீகரிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜயீத் விருது வழங்க முடிவு செய்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டது குறிப் பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசத் தந்தையான ஷேக் ஜயீத் பின் சுல்தானின் பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது 100-வது பிறந்தநாள் ஆண் டில் இந்த விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

ரூபே கார்டு அறிமுகம்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார்.

அப்போது, இந்தியாவின் ரூபே கார்டை ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதற்கு முன்பாக, இரு நாடு களுக்கும் இடையே பணப்பரிவர்த் தனைகளை அனுமதிப்பது தொடர் பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் தனது ரூபே கார்டை பயன்படுத்தி சில பூஜைப் பொருட்களை மோடி வாங்கினார்.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களான 'லூலூ, 'பெட்ரோ கெமிக்கல் மிடில் ஈஸ்ட்', 'என்எம்சி ஹெல்த்கேர்' மற்றும் 'லேண்ட் மார்க்' உள்ளிட்டவை இந்திய ரூபே கார்டை பரிவர்த்தனைக்கு அனுமதிப்பதாக முதல்கட்டமாக அறிவித்துள்ளன.

ரூபே கார்டு அறிமுகத்தால், இந்தியா - ஐக்கிய அமீரகம் இடையிலான தொழில் ரீதியான பரிவர்த்தனைகள் எளிதாகும் எனக் கூறப்படுகிறது.

ரூபே கார்டு இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை களை ஊக்குவிப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். பிற நாடுகளின் தயாரிப்பான மாஸ்டர் கார்டு, விசா கார்டு ஆகிய வற்றை போன்று, ரூபே கார்டு என்பது இந்தியாவால் உருவாக் கப்பட்ட பாதுகாப்பான பரிவர்த் தனை கார்டுகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது 50 கோடி ரூபே கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ரூபே கார்டு ஏற்கெனவே சிங்கப்பூர் மற்றும் பூடானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பரிவர்த்தனை நிறுவனங்களுடனும் ரூபே கார்டை அனுமதிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். அங்கு அவர்கள் ரூபே கார்டுகளை பயன் படுத்தும்போது பணப்பரிவர்த் தனை எளிதாவதுடன், சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் அந்நிய செலாவணி பரிமாற்றத் துக்கான கட்டணங்களும் குறையும் எனத் தெரிகிறது.

இரு நாடுகளும் செய்துகொண் டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத் தின்படி, 1.75 லட்சம் வணிகத் தளங் களிலும், 5,000 ஏடிஎம் மையங்களி லும் ரூபே கார்டுகளைப் பயன் படுத்த வழிவகை செய்யப்பட உள்ளது.

ஆதரவுக்கு நன்றி

முன்னதாக, ‘கலீஜ் டைம்ஸ்' செய்தியாளருக்கு மோடி பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முழுக்க முழுக்க உள்நாட்டு விவ காரம் ஆகும். அரசமைப்புச் சட்டத் துக்கு உட்பட்டு மிகவும் வெளிப் படையாக இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்து காரணமாக கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனால், அங்குள்ள இளை ஞர்கள் தீவிரவாதத்தின் பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந் தியாவின் ஏனைய பகுதிகளை ஒப்பிடும்போது, காஷ்மீரில் போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இவை அனைத்துக்கும் முடிவு கட்டும் விதமாகவே, இந்த நடவடிக் கையை நாங்கள் எடுத்திருக் கிறோம்.

இந்தியாவின் இந்த நடவடிக் கையை ஐக்கிய அரபு அமீரகம் புரிந்து கொண்டதுடன் மட்டுமல்லா மல் வெளிப்படையாக எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு மிகுந்த நன் றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி கூறினார்.

பஹ்ரைன் பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பஹ்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அவரை, தலைநகர் மனாமாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு இளவரசரும், பிரதமருமான கலீஃபா பின் சல்மான் நேரடியாக சென்று வரவேற்றார்.

இதையடுத்து, அங்குள்ள அல்-குதைபியா மாளிகையில் இருவரும் ஆலோசனை நடத் தினர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x