Published : 24 Aug 2019 05:28 PM
Last Updated : 24 Aug 2019 05:28 PM

அருண் ஜேட்லி மறைவு: இந்தியாவிற்கான சீன தூதர் இரங்கல்

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு இந்தியாவிற்கான சீன தூதர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

தன் பின்னர் கடந்த 9-ம் தேதி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.
திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் அருண் ஜேட்லி மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அருண் ஜேட்லியின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அருண் ஜேட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

— Sun Weidong (@China_Amb_India) August 24, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x