ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்: பிரிட்டனின் புதிய பிரதமர் பேட்டி

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
Updated on
1 min read

லண்டன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன

உலகின் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் பெற்ற நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியநாடுகளின் தலைவர்களில் பெரும்பாலானோர் ஒன்றிணைந்து கலந்துகொள்ளும் ஜி7 உச்சிமாநாடு பிரான்சில் நேற்று தோடங்கியது.

இதில் கலந்துகொள்ள பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பியாரிட்ஸ் வந்திருந்தார். பிரதமராக பொறுப்பேற்று அவர் கலந்துகொள்ளும் முதல் சர்வதேச மாநாடு இது. அக்டோபர் 31ம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள நிலையில் இரண்டு மாதங்கள் முன்னதாக இம்மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்த நாடு எடுத்துள்ள ஜனநாயக முடிவை சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், நாங்கள் உலக நாடுகளிலிருந்து விலகி நிற்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். சிலர்பிரிட்டனின் சிறந்த நாட்கள் கடந்து சென்றுவிட்டதாகவும் நினைக்கிறார்கள்.

அந்த நபர்களிடம் நான் சொல்கிறேன்: நீங்கள் மிகவும் தவறாக நினைக்கிறீர்கள். பிரெக்சிட்டிற்குப் பிறகு உலக அரங்கில் இங்கிலாந்து ஒரு ஆற்றல்மிக்க பங்காளியாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்' என்றார்.

பிரிட்டனின் செய்தி தொடர்பாளர் ஒருவர், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப்பும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது ''மேலும் நிறைய பேசவேண்டுமென்று விருப்பம்'' என டிரம்ப் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in