Published : 24 Aug 2019 08:03 AM
Last Updated : 24 Aug 2019 08:03 AM

புதிய இந்தியாவை உருவாக்க ஊழல், தீவிரவாதம் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பாரிஸ்

புதிய இந்தியாவை உருவாக்க ஊழல், குடும்ப அரசியல், திருட்டு, மக்கள் பண முறைகேடு, தீவிர வாதம் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரு கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரான்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்களிடையே நேற்று உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

புதிய இந்தியாவை உருவாக்கு வதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். வளர்ச்சிப்பாதையை நோக்கி இந்தியா வேகமாக நகர்கிறது. 2030 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப் பட்டிருக்கும் பருவநிலை மாற்ற இலக்குகளில் பெரும்பாலான வற்றை அடுத்த ஆண்டு ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா அடையும்.

நான் இப்போது கால்பந்து விளையாடும் மக்களின் தேசத்தில் இருக்கிறேன். கால்பந்து விளை யாட்டில் கோல் எடுப்பதன் முக்கியத் துவம் உங்களுக்கு தெரியும். கோல் எடுப்பதுதான் கால்பந்து வீரருக்கு ஒரே குறிக்கோளாக இருக்கும்.

எங்களுக்கும் அப்படித்தான் முக்கியமான கோல்கள் (இலக்கு) நிறைய இருக்கின்றன. கடந்த 5 வருடங்களில் நாங்கள் பல இலக்கு களை அடைந்து இருக்கிறோம். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக வும், வளர்ச்சிக்காகவும் உயிர் துறந்த மக்களுக்கும், சாதனை யாளர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் வெற்றிபெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். ஊழல், குடும்ப அரசியல், திருட்டு, மக்கள் பண முறைகேடு, தீவிர வாதம் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறோம். இதற்கு முன்பு எந்த அரசும் இந்தியாவில் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டது கிடை யாது. கடந்த 75 நாட்களில் இந்தியா வில் நாங்கள் பல அதிரடி விஷயங் களை நிறைவேற்றி இருக்கிறோம்.

இந்தியாவில் தற்போது தற் காலிகம் என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது. அந்த தற்காலிகம் என்ற வார்த்தையை நீக்குவதற்கு 70 ஆண்டுகள் பிடித்துள்ளது (காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து பிரதமர் மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டார்).

இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அடைய தீவிர முயற்சி எடுக்கப் படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேக்ரான்

முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது.

இதுகுறித்து மேக்ரான் கூறும் போது, “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும். இதில் 3-வது நபரோ மற்ற நாடுகளோ தலையிடத் தேவையில்லை” என்றார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் வெளி யிட்ட கூட்டு அறிக்கை வெளியிட்ட னர். அதில் மேக்ரான் கூறியிருப்ப தாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும். காஷ்மீர் மக்களின் நலனும், அவர் களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கவேண்டும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நான் சில நாட்களுக்கு முன்பு பேசினேன். பிரச்சினையைத் தீர்க்க இரு நாட்டு தலைவர்களின் பேச்சு வார்த்தைதான் சரியாக இருக்கும் என்று அவரிடம் எடுத்துக்கூறினேன்.

இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத் தின்படி 36 ரபேல் விமானங்களில் முதல் விமானம் அடுத்த மாதம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு மேக்ரான் கூறினார்.

பிரதமர் மோடி கூறும்போது, “இந்தியா, பிரான்ஸ் இடையேயான உறவு என்பது சுயநலம் சார்ந்தது அல்ல. மாறாக, சுதந்திரம், சமத் துவம், சகோதரத்துவம் ஆகிய திடமான கொள்கைகளின் அடிப் படையில் அமைந்துள்ளது. தீவிர வாதத்தை எதிர்த்தல், பாதுகாப்பு விஷயங்களில் பிரான்ஸுடனான ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்” என்றார் மோடி.

நினைவிடம் திறப்பு

1950, 1966 ஆகியஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துகளின் நினை வாக மவுண்ட் பிளாங்க் பகுதியில் நிட் டி ஏஜில் என்ற பெயரில் பிரான்ஸ் அரசு நினைவிடம் அமைத்துள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

இந்த விபத்துகளில் இந்தியா வின் அணு விஞ்ஞானி ஹோமி ஜே பாபா உள்ளிட்ட 154 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகம்

பிரான்ஸைத் தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டார். அந்நாட்டின் தலைநகர் அபுதாபியில் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் உள்ளிட் டோரை அவர் சந்தித்துப் பேசவுள் ளார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய 3 நாடு களில் பிரதமர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x