Published : 22 Aug 2019 07:04 PM
Last Updated : 22 Aug 2019 07:04 PM

மியான்மர் திரும்ப மறுக்கிறார்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள்: கட்டாயப்படுத்தும் எண்ணமில்லை- வங்கதேசம் அறிவிப்பு

மியான்மருக்கு செல்வதற்கான வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் நேர்காணலுக்கு வந்தவர்களில் நாங்கள் மியான்மர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என கோஷங்கள் எழுப்பினர்.

டாக்கா

வங்க தேசத்தில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர்களை மேலும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோஹிங்கியாக்கள் பல நூற்றாண்டுகளாக மியான்மரில் இருந்தபோதிலும், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களாகவே மியான்மர் அரசாங்கம் கருதியது. இதனால் 1990களின் முற்பகுதியில் மியான்மரில் உள்ள பெரும்பாலான ரோஹிங்கியாக்கள் குடியுரிமைகள் பறிக்கப்பட்டன.

ரோஹிங்கியாக்கள் மியான்மர் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்படவில்லை, பல குடும்பங்கள் நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்த போதிலும் அவர்களை வங்காள குடியேறிகளாகவே கருதுகின்றனர்.

ரோஹிங்கியாக்களின் மாபெரும் வெளியேற்றம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2017ல் தொடங்கியது, ரோஹிங்கியா கிளர்ச்சிக் குழு ஒன்று மேற்கு மியான்மரில் ராகைன் மாகாணத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது,

இது ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக நாட்டின் ராணுவத்தால் ஒரு மிருகத்தனமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இச்சம்பவத்தின்போது 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை பொதுமக்கள் இறந்தனர். ஐ.நா. பார்வையாளர்கள் இந்த ராணுவ ஒடுக்குமுறையை "இன அழிப்பு" என்று விவரித்தனர்.

மியான்மருக்கு திரும்பிச்செல்ல மறுக்கும் ரோஹிங்கிய மக்கள் குறித்து வங்கதேசத்தின் பிடிநியூஸ்24.காம் கூறியுள்ளதாவது:

''வங்கதேச அதிகாரிகள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர், ஆனால் ரோஹிங்கியாக்கள் யாரும் தங்கள் விருப்பப்படி திரும்பத் தயாராக இல்லை என்று அகதிகள், நிவாரணம் மற்றும் திருப்பி அனுப்பும் ஆணையர் எம்.டி.அபுல் கலாம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 25, 2017 அன்று மியான்மரில் ராக்கைன் மாகாணாத்தில் ரோஹிங்கிய மக்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்ட இச்சம்பவம் அங்குள்ள 740,000 ரோஹிங்கியர்களை பெருமளவில் வெளியேறத் தூண்டியது. பின்னர் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றனர். வங்கதேசத்தில் பரந்த அகதிகள் முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதன் இரண்டாம் ஆண்டை நெருங்குவதற்குள் அதிகளை திருப்பி அனுப்பும் முயற்சியில் வங்கதேசம் ஈடுபட்டது.

தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் 2018 நவம்பரில் அவ்வாறு செய்யத் தவறியதால், வங்கதேசம் மற்றும் மியான்மர் கடந்த வாரம் 3,450 ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்ப முடிவு செய்தன. அப்போது வங்சதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. மோமன் முயற்சிகளை நிறுத்த மறுத்துவிட்டார்.

டாக்காவிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், இது மியான்மரின் பிரச்சினை, அவர்கள் அதைத் தீர்க்க வேண்டும், நாங்கள் எதையும் கட்டாயப்படுத்த மாட்டோம்" என்றார்.

திருப்பி அனுப்பத் தயாராக உள்ள 235 குடும்பங்களை இதுவரை நேர்காணல் நடத்தி அவர்களை சந்தித்து பேசியதாக உள்ளூர் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

ஐ.நா. அகதிகள் நிறுவனமான யு.என்.எச்.சி.ஆர். வங்கதேச அதிகாரிகளுடன் சேர்ந்து இதற்கான நேர்காணல்களை நடத்தியது.

இன்று நேர்காணலுக்குச் சென்ற ரோஹிங்கியாக்களில் ஒருவரான 41 வயதான ஓட்டுநர் நூர் ஹூசைன் ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கியபோது மியான்மரில் இருந்து தப்பி ஓடிவந்தவர்.

நூர் ஹூசைன் நேர்காணலில் பேசும்போது கூறியதாவது:

''சில கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆறு மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட தனது குடும்பத்தின் எட்டு உறுப்பினர்களுடன் மியான்மருக்கு திரும்ப மாட்டேன் என்று நேர்காணலில் ஹொசைன் கூறினார். எங்களுக்கு ரோஹிங்கியா அட்டை வழங்கப்பட வேண்டும், எங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், மியான்மர் அவர்கள் இடம்மாற்றி வைக்கப்பட்ட (உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்) முகாம்களில் தங்கியுள்ளவர்களை விடுவிக்க வேண்டும், இந்த கோரிக்கைகளுக்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்கும்போதுதான் ​நான் திரும்பிச் சென்றவுடன் அவர்கள் எனது சுதந்திரத்தை கட்டுப்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும்.'' என்று தெரிவித்தார்.

மியான்மர் அரசாங்கம் ரோஹிங்கியாக்களுக்கு "தேசிய சரிபார்ப்பு அட்டைகளை" வழங்கும் என்று கூறியுள்ளது, இது நாட்டில் தங்குமிடத்தை நிறுவும், ஆனால் அவர்களின் குடியுரிமை அல்ல - இது ரோஹிங்கியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x