காஷ்மீர் விவகாரம் இல்லாமல் பேச்சுவார்த்தை கிடையாது: பாகிஸ்தான் மிரட்டல்

காஷ்மீர் விவகாரம் இல்லாமல் பேச்சுவார்த்தை கிடையாது: பாகிஸ்தான் மிரட்டல்
Updated on
1 min read

இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் கண் டிப்பாக இடம்பெற வேண்டும், இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் உஃபா நகரில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினர்.

அப்போது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு நவாஸ் அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் இருநாட்டு வெளியுறவுச் செயலர்களும் இணைந்து கூட் டறிக்கை வெளியிட்டனர். அதில் பாகிஸ்தானில் நடைபெறும் மும்பை தீவிரவாத தாக்குதல் விசாரணை விரைவுபடுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்து கூட் டறிக்கையில் எதுவும் குறிப்பிட வில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ், இஸ்லாமாபாதில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மும்பை தாக்குதல் வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

மேலும் இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இல்லையெனில் அமை திப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை. எங்களது அடிப்படை கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசு வழக்கறிஞர் சவுத்ரி ஆஹர் நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் பேசியபோது, மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜகியூர் ரஹ்மான் லக்வியிடம் குரல் பதிவை பெறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்ற தெரிவித்தார்.

இதுகுறித்து மும்பை தாக்குதல் வழக்கின் இந்திய அரசு வழக்கறி ஞர் உஜ்ஜல் நிகாம் கூறியபோது, குற்றவாளியின் குரல் பதிவை பெறு வதற்கு அந்த நாட்டு சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால் பாகிஸ்தான் நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in