Published : 21 Aug 2019 12:18 PM
Last Updated : 21 Aug 2019 12:18 PM

ஆப்கானில் ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாட்களாக 200 ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் குனார் மாகாண ஆளுநர் அப்துல் கானி கூறும்போது, “ஆப்கானிஸ்தனின் குனார் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் சுமார் 200 ஏவுகணை கொண்டு தாக்கியது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக வீடுகள் பல சேதமடைந்தன” என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்த கூடுதல் தகவல் இதுவரை வெளிவரவில்லை.

எனினும் ஆப்கானில் உள்ள தீவிரவாத குழுக்களை குறி வைத்து இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் தொடர்ந்து அச்சம் நிலவுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சமீபகாலமாக தலிபான்கள் பிரதிநிதிகளுடன் ஆப்கனில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையிலும் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக இந்த ஆண்டின் முதற் பகுதியில் மட்டும் குண்டுவெடிப்பு மற்றும் வான்வழித் தாக்குதலால் 3, 812 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x