Published : 20 Aug 2019 12:22 PM
Last Updated : 20 Aug 2019 12:22 PM

பாக். ராணுவத் தளபதி பதவிக் காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ஜாவத் பாஜ்வாவின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை அறிவித்தது. வரும் நவம்பர் மாதத்துடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவத் பாஜ்வாவின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அவரது பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாவத் பாஜ்வாவின் பதவி நீட்டிக்கப்பட்டது குறித்து மூத்த பாதுகாப்பு ஆலோசகர் மசூத் கூறும்போது, “ஜாவத், இம்ரான் கானுடன் மட்டும் நல்ல புரிதலில் இருப்பவர் அல்ல. பிராந்தியம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவர். ஆப்கானிஸ்தான் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை என்று அசாதாரண சூழ்நிலையில் இருக்கும்போது இந்த நீட்டிப்பு அவசியம்” என்றார்.

இதற்கு முன்னரும் முஷரஃப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்திலும் அப்போது ராணுவத் தளபதியாக இருந்த கயானியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவும்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் இந்தப் பதவி நீட்டிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x