Published : 19 Aug 2019 08:14 AM
Last Updated : 19 Aug 2019 08:14 AM

ஹாங்காங் போராட்டமும் அடக்கத் தயாராகும் சீனாவும்

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

கடந்த 3 மாதமாக ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டம் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. எல்லோரும் பயந் ததுபோல், போராட்டத்தை அடக்க சீனா தயாராகி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் தியானென்மென் சதுக்கத்தில் என்ன நடந்தது என்பது இப்போது ஹாங்காங்கின் தெருவில் இறங்கி போராடி வருபவர்களுக்குத் தெரி யாது. ஆனால், அங்கு போராடிய மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது உலக நாடுகளுக்குத் தெரி யும். கடந்த 1989-ம் ஆண்டு நடந்த அந்த போராட்டத்தில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை நூறா, ஆயிரமா என இதுவரை யாருக்கும் தெரியாது. கடந்த ஜூன் மாதம் ஹாங் காங்கில் கொண்டு வரப்பட்ட ‘குற்ற வாளிகளை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்டத்துக்கு' எதிராக நடந்த போராட்டம், யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.

போராட்டத்துக்கு காரணமான சட்டத்தை ஹாங்காங்கின் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் வாபஸ் பெற்று விட்டார். ஆனாலும் சட்டமன்றத்துக்குள் புகுந்த போராட் டக்காரர்கள் இதைக் கலவரமாக கருதக் கூடாது என்றும் போலீஸ் வன்முறை குறித்து விசாரிக்க வேண் டும் என்றும் கைது செய்யப்பட் டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், சட்டத்தை வாபஸ் பெற்ற பிறகும் அதைக் காரணமாகக் காட்டி போராடு வதால் அவர்களை தீவிரவாதிகளாகத் தான் கருத வேண்டியிருக்கிறது என சீனா கூறியுள்ளது. கடந்த வாரத்தில் போராட்டக்காரர்கள் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமான நிலையம் முடங்கியது. போலீஸாரும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

போராட்டத்தை எப்படியும் முடி வுக்கு கொண்டு வர வேண்டும் என ஹாங்காங் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக போராட்டமும் குறைந் துள்ளது. ஆனால், ஹாங்காங் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் ஹாங்காங் எல்லையில் சீனா குவித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஆசியாவின் மிகப் பெரிய நிதி மையமாக இருக்கும் ஹாங்காங் மீது, ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது மிகுந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என சீனா அஞ்சுகிறது. ஏற்கனவே அங்கு நடந்து வரும் போராட்டம் காரணமாக ஹாங்காங்கின் ரியல் எஸ்டேட் மதிப்பு 6,000 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, போராட்டக் காரர்களுக்கும் ஆதரவு குறைந்து வருகிறது.

போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க சீனா விரும்பினா லும், அப்படி செய்யாமல் இருப்பதற்கு காரணம் இருப்பதாக கிழக்கு ஆசிய நிபுணர்கள் கூறுகிறார்கள். ராணு வத்தை பயன்படுத்தினால் பொருளா தார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஏற்பட்ட தயக்கம்தான் அது.

ஏற்கெனவே கடந்த 2 மாதமாக ஹாங்காங்கின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நேரத்தில் அங்கு ராணுவ நடவடிக்கை மூலம் ரத்த ஆறு ஓடினால், தியானென்மென் சதுக்கப் படுகொலையின் போது ஏற்பட்ட எதிர்ப்பு போன்று உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பும். ஒரே நாடு இரண்டு ஆட்சி முறை என்ற உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட விஷயத்தை கேள்விக்குரியதாக்கி விடும். மேலும் ஹாங்காங் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளால், தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம் காரணமாக, அது சீனாவிலும் எதிரொலிக்கும் என சீனத் தலைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சமீப காலமாக உலக நாடுகளின் கவனம் ஹாங்காங் மீது திரும்பி யுள்ளதை சீனத் தலைமை நன்கு அறியும். ஹாங்காங் சம்பவங்கள் குறித்து தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஏற்கனவே வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் சீனா, அரசியல் ரீதியாகவும் மோதலை ஏற்படுத்தி்க் கொள்ள விரும்பவில்லை. ஹாங்காங் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா கடுமையாக கண்டனம் தெரிவிக்கும் என்பது சீனாவுக்கும் தெரியும். ஹாங்காங் விஷயத்தில் ட்ரம்ப் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ‘‘சுதந்திரம், நீதி, உண்மை யான சுயாட்சிக்காக போராட்டம் நடத்தி வரும் ஹாங்காங் போராட்டக் காரர்கள் தங்கள் வீரத்தாலும் உறுதி யாலும் இந்த உலகைக் கவர்ந்து விட்டனர்’’ எனக் கூறியிருக்கிறார்.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

.தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x