

பிரான்ஸிலிருந்து இங்கிலந்துக்கு செல்வதற்கு கால்வாய் சுரங்கத்தை பயன்படுத்திய சுமார் 2000 குடியேறிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கம் ஆபரேட்டர் அளித்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கண்காணிப்பில் இந்த சட்டவிரோத பயணம் கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமான பயணம் தொடர்ந்து நடந்து வந்தாலும் அதில் இதுவே அதிக எண்ணிக்கையிலான மக்களை கொண்டது ஆகும்.
இது தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு கால்வாய் சுரங்கம் வழியாக சென்ற 6 குடியேறிகள் விபத்து ஏற்பட்டு காயமடைந்தனர்.
பின்னர் நடந்த கண்காணிப்பில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 1,900 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்றார்.