Published : 18 Aug 2019 05:00 PM
Last Updated : 18 Aug 2019 05:00 PM

இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள் கவனமேற்கொள்ள வேண்டும்: பாக். பிரதமர் இம்ரான் கான்

இந்தியா தனது ‘முதலில் பயன்படுத்தக் கூடாது’ என்ற அணுக்கொள்கையில் திட்டவட்டமாக உள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததையடுத்து இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்று உலக நாடுகள் பொறுப்புடன் கவனமேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கான் தன் ட்விட்டரில், “பாசிச, இந்து இனவெறி மேட்டிமை மோடி ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனமேற்கொள்ள வேண்டும், இந்த விவகாரம் இந்தப் பகுதியை மட்டும் தாக்கம் செலுத்துவதல்ல, உலகம் முழுதிற்குமே தாக்கம் ஏற்படுத்தக் கூடியது” என்று தெரிவித்தார்.

இருநாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தின் மீதான உலகக் கவனத்தைத் திசைத்திருப்ப இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறியதையடுத்து தற்போது இம்ரான் கான் இதனை தெரிவித்துள்ளார்.

“ஜெர்மனியை நாஜிக்கள் பிடித்தது போல் இந்தியாவையும் பாசிச, இனவெறி இந்து மேட்டிமைவாத கொள்கையுடைய தலைமை பிடித்துள்ளது. இது கூண்டில் உள்ள 9 மில்லியன் காஷ்மீர் மக்களை பாதிக்கும். இது உலகம் முழுதும் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.

நாஜி கொள்கைக்கும் அதன் இன அழிப்புக் கொள்கைக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக நிறுவனர்களுக்கும் உள்ள தொடர்பை கூகுளில் தேடிப்பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லிம்கள் கைது முகாம்களையும் குடியுரிமை ரத்தையும் எதிர்நோக்குகின்றனர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெறிபிடித்து அலைகின்றனர். சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது பரவும்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x