Published : 17 Aug 2019 02:49 PM
Last Updated : 17 Aug 2019 02:49 PM
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். அவரைஅந்நாட்டு பிரதமர் வரவேற்றார்.
பூடான் சுற்றுப்பயணம் குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சற்று நேரத்திற்கு முன்னர் பூடான் சென்றடைந்தேன்.
விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்ற பூடான் பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பூடான் சென்றடைந்த மோடியை, வழியெங்கிலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் கையில் இரு நாட்டுக் கொடியை எந்திக் கொண்டு வரவேற்றனர். மேலும் தாஜ் தஷி ஓட்டல் வந்தடைந்த மோடியை அங்கு கூடியிருந்த இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பிரதமர் மோடி பூடான் சென்றது தொடர்பான வீடியோவை இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Festivity in the air!
And as the carcade approaches Thimphu, people dressed in their finest clothes, come out to greet PM @narendramodi. pic.twitter.com/Zb3w8CKupy
— Raveesh Kumar (@MEAIndia) August 17, 2019
பிரதமரின் பூடான் பயணத்தில் இரண்டு நாடுகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT