செய்திப்பிரிவு

Published : 12 Aug 2019 18:27 pm

Updated : : 12 Aug 2019 18:28 pm

 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: புர்ஹான் வானி இறுதி ஊர்வல மக்கள் கூட்டத்தை காஷ்மீர் போராட்டமாக சித்தரித்த பாக். அமைச்சர்

pak-minister-shares-burhan-wani-funeral-video-as-kashmiris-protesting-against-indian-govt

பாகிஸ்தான் அமைச்சர் அலி ஹைதர் ஜெய்தி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு என்று பதிவிட்டிருந்தார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு வாய்ப்பேயில்லாத நிலையில் காஷ்மீரில் மக்கள் போராட்டம் என்று இவர் வெளியிட்ட வீடியோ சுமார் 1,100 மறு டிவீட்கள் கண்டது.

இதனை ஆல்ட் நியூஸ் ஊடகத்துக்கு ட்விட்டர் வாசி ஒருவர் சுட்டிக் காட்ட ஆல்ட் நியூஸ் அந்த வீடியோவை கூகுளில் ரிவர்ஸ் சர்ச் செய்தது, அப்போது அந்த ஒரிஜினல் வீடியோ புர்ஹான் வானி என்ற தீவிரவாதி கொல்லப்பட்டு அவரது இறுதி சடங்கு ஊர்வல வீடியோ என்பது தெரியவந்தது.

அதாவது 3 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோவை தற்போது பதிவிட்டு அதை அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கான எதிர்ப்பு என்று சித்தரித்து பாகிஸ்தான் அமைச்சர் திரித்து வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.

இப்படியாக, காஷ்மீர் நிலவரங்கள் பற்றி பாகிஸ்தானில் பொய்ச்செய்திகள் வலம் வருவதாகத் தெரியவந்துள்ளது.

KashmirArticle 370Indian Govt.Pak. minister disinformationBurhan Wani funeral processsion videoTweet'காஷ்மீர் விவகாரம்புர்ஹான் வானி இறுதி ஊர்வல வீடியோபாக். அமைச்சர் தவறான தகவல்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author