வர்த்தகம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்: ட்ரம்ப்

வர்த்தகம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்: ட்ரம்ப்
Updated on
1 min read

வர்த்தகம் குறித்து தொடர்ந்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தற்போது ஒப்பந்தத்துக்குத் தயாராக இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியூயார்க்கில் பேசும்போது, “சீனாவுடன் நாங்கள் நல்ல நட்புறவில் இருக்கிறோம். தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது அவர்களுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சீனாவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

மேலும், இந்தச் சந்திப்பில் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருட்கள் மீது 10% கட்டணங்களை விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார வெற்றிகளைத் தொடர வேண்டுமெனில் காலங்காலமாக இருந்து வரும் மோசமான வர்த்தகக் கொள்கைகளை தலைகீழாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் பதவியேற்றது முதலே கூறி வந்தார்.இந்நிலையில் சீனத்திலிருந்து இறக்குமதியாகும் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புச் சாதனங்கள், சலவை இயந்திரங்கள் ஆகியவற்றின் மீது அமெரிக்கா வரி விதித்தது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு சீனத் தரப்பிலிருந்து கடும் எதிர்வினை வந்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ், மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் போன்றவற்றுக்கு சீனாவும் காப்பு வரி விதித்தது. இந்நிலையில் இந்த வர்த்தக மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளும் முயல்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in