நடமாட்டத்தை முழுமையாக கண்காணிக்க 1600 தீவிரவாதிகளின் கால்களில் மின்னணு சிப் பொருத்தி கண்காணிக்க முடிவு: பாகிஸ்தானில் முதல் முறையாக அதிரடி

நடமாட்டத்தை முழுமையாக கண்காணிக்க 1600 தீவிரவாதிகளின் கால்களில் மின்னணு சிப் பொருத்தி கண்காணிக்க முடிவு: பாகிஸ்தானில் முதல் முறையாக அதிரடி
Updated on
1 min read

சந்தேகப்படும் தீவிரவாதிகள் 1600 பேரின் கால்களில் மின்னணு சிப் பொருத்த பாகிஸ்தான் மாகாண அரசு முடிவெடுத்துள்ளது.பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தீவி ரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஐ.நா.வும் பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன. எனினும், ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை மீறி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

எனினும் உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக அவ்வப்போது தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சந்தேகிக்கப்படும் தீவி ரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் என கருதப்படும் 1600 பேரின் கணுக்காலில் மின்னணு சிப் பொருத்த பஞ்சாப் மாகாண அரசு முடிவெடுத்துள்ளது. அதன்மூலம் அவர்களுடைய நடமாட்டத்தை முழு மையாக கண்காணிக்க முடியும் என்று பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“மின்னணு சிப்களை 2 நாடுகளிடம் இருந்து வாங்கி இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் 1600 சந்தே கிக்கப்படும் தீவிரவாதிகளின் கணுக் கால்களில் சிப் பொருத்தும் பணி தொடங்கப்படும். நிபந்தனை அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களில் தங்கும்படி அனுமதிக்கப்பட்டுள்ள இந்நபர்களை சம்மன் அனுப்பி வர வழைத்து சிப் பொருத்தி விடுவோம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிபந்தனை அடிப்படையில் சில இடங்களில் தங்குவதற்கு அனு மதிக்கப்பட்ட தீவிரவாதிகள் பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பது தெரிய வந்தது. இதை யடுத்து மின்னணு சிப் பொருத்தி அவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பஞ்சாப் மாகாண அரசு முடிவு செய்துள்ளது. சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் உடலில் மின்னணு சிப் பொருத்துவது பாகிஸ்தான் வர லாற்றில் இதுவே முதல்முறை.

பாகிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள், ‘தீவிரவாத தடுப்பு சட்டம் - 1997’ன் நான்காவது அட்டவணையில் வைக்கப் பட்டுள்ளனர்.

இந்த அட்டவணையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் முக்கிய தீவிரவாதிகளின் பெயர்கள், பிரிவினைவாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in