Published : 09 Aug 2019 07:30 AM
Last Updated : 09 Aug 2019 07:30 AM

அரபு நாடுகளில் பாகிஸ்தான் மருத்துவர்கள் பணி நீக்கம்: மருத்துவக் கல்வியில் தரம் இல்லை எனக் குற்றச்சாட்டு

லாகூர்

சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் பணிபுரிந்து வந்த பாகிஸ்தான் முதுநிலை மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் மருத்துவக் கல்வி தரமானதாக இல்லை எனக்கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் 'டான்' இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ் தான் புகலிடமாக இருந்து வருகிறது. இதனால் சர்வதேச அரங்கில் பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தான் புறக் கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளின் இந்த முடிவு பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சவுதி அரேபியாவின் மருத்துவ துறையில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் முறையாக பயிற்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், பாகிஸ்தானின் முதுநிலை மருத்துவக் கல்வி தங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இல்லை என சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் எம்.எஸ்., எம்.டி. ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகள் செல்லாது என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக அந்த நாடுகளில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் மருத்துவர்கள் வேலையை இழந்துள்ளனர்.

அத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்ப தயாராக இருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிநீக்க கடிதத்தில், “மருத்துவக் கல்வித் தகுதி தொடர்பான உங் களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படுகிறது. ஏனெனில், பாகிஸ்தானில் நீங்கள் பெற்ற முதுநிலை மருத்துவ பட்டம், சவுதி அரேபியாவின் சுகாதார ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை” என கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சவுதி சுகாதார அமைச்சகத்தின் ஒரு குழுவால் பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர். இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பெற்று, கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் மருத் துவர்கள் கூறும்போது, “இந்தியா, எகிப்து, சூடான் மற்றும் வங் கதேசத்தின் முதுநிலை மருத்துவ பட்டத்தை சவுதி அரேபிய அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், எங்கள் நாட்டு மருத்துவ பட்டத்தை மட்டும் நிராகரித்திருப்பது அவமானமாக உள்ளது” என்றனர்.

பாகிஸ்தானில் முதுநிலை மருத் துவ படிப்பை ‘காலேஜ் ஆப் பிசிசி யன்ஸ் அன்ட் சர்ஜியன்ஸ் பாகிஸ் தான்’ (சிபிஎஸ்பி) கண்காணித்து வரு கிறது.

இந்த அமைப்புதான் சான்றிதழ் களை வழங்கி வருகிறது. இந்நிலை யில், தங்கள் எதிர்காலம் கேள்விக் குறியானதற்கு சிபிஎஸ்பி அமைப்பு தான் காரணம் என பாகிஸ்தான் மருத்துவர்கள் குற்றம்சாட்டி உள்ள னர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் சிபிஎஸ்பி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் குலாம் முஸ்தபா அரைன் மறுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x