Published : 08 Aug 2019 12:29 PM
Last Updated : 08 Aug 2019 12:29 PM

வாகா எல்லை வழியாக இந்திய வர்த்தக பொருட்கள்: ஆப்கனுக்கு தடை விதித்தது பாகிஸ்தான்

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியா வாகா நுழைவாயில் | கோப்புப் படம்

இஸ்லாமாபாத்

இந்தியப் பொருட்களை வாகா எல்லைப் பகுதி வழியாக கொண்டு செல்ல ஆப்கானிஸ்தானுக்கு, பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையால் தற்போது மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் நேற்று முறித்தது. இது தற்போது ஆப்கனையும் பாதித்துள்ளது.

இந்தியப் பொருட்கள் பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்வது தங்கள் நாட்டின் அமைதிக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் ஒரு செயலே என்றுபாகிஸ்தான் ஆப்கனுக்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:

“இந்திய வர்த்தகப்பொருட்களை கொண்டு செல்ல வாகா எல்லை வழியை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பு எங்களை தொடர்பு கொண்டனர். அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம்.

இனி வாகா எல்லை வழியாக இந்தியாவிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம், என ஆப்கானிஸ்தானிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இது நமது இரு நாடுகள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பான பிரச்சினை என்பதைக் தெரிவித்தோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளை போக்குவரத்து வர்த்தகத்தோடு இணைக்க வேண்டாம், போக்குவரத்து வர்த்தக ஒப்பந்தம் மூன்றாவது நாடான இந்தியாவும் சம்பந்தப்பட்டது என்பதால் இதுகுறித்து ஆப்கனிடம் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருட்களை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்வது எங்கள் நாட்டின் அமைதிக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் ஒரு செயலே என்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆப்கன் அதிபர் வருகைக்குப் பின்னர் இரு நாட்டின் வர்த்தகக் குழுக்கள் மூலம் ஆப்கன்-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் போக்குவரத்து வர்த்தகம் தொடர்பான இரு தரப்பு திட்டங்களும் பரிமாறிக் கொள்ளப்படும். ஆப்கான் தூதர் அழைப்பை ஏற்று, வரும் ஆகஸ்ட் 20 அன்று 10 நாட்கள் பயணமாக காபூல் செல்கிறேன். அப்போது வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இவ்வாறு பாக். பிரதமரின் வர்த்த ஆலோசகர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x