

உலக மக்கள் தொகையில் கால்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்க் கொண்டு வருகிறார்கள் என்று உலக நீர்வள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகின் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது
உலக நாடுகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து உலக நீர்வள ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகின் 17 நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக இதில் இந்தியாவுக்கு 13 வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ உலகின் சுமார் 17 நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் பல பூஜ்ய நாளை ( நீர் முழுவதும் தீர்ந்து போகும் நாள்) நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த நாடுகளின் விவரம், கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டான், லிபியா,குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், சான் மரினோ, பக்ரைன், இந்தியா, பாகிஸ்தான், ஓமன், துர்மெனிஸ்தான், போட்ஸ்வானா, எரிட்ரியா .
இந்த நாடுகளில் சுமார் 80 % நிலத்தடி நீர் விவசாயம்,தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாடுகளில் தேவை அதிகரிக்கும்போது சிறிய அளவிலான வறட்சி கூட பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக கேப் டவுன், சென்னையில் ஏற்பட்ட வறட்சியை குறிப்பிடலாம்.
நிலத்தடி நீர் அதிக முள்ள நாடுகளில் மெக்சிகோ, நேபாளம், போர்ச்சுக்கல், மொராகோ உள்ளிட்ட 27 நாடுகள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.