Last Updated : 25 Jul, 2015 06:36 PM

 

Published : 25 Jul 2015 06:36 PM
Last Updated : 25 Jul 2015 06:36 PM

கென்யாவில் ஒபாமா: அதிபரான பின் முதன்முறையாக தந்தையின் நாட்டுக்கு சென்றார்

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார். அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது அதிக அளவு ஈர்ப்பு கொண்டிடுக்கும் கென்யா நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.

கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு அந்நாட்டு அதிபர் உஹுரு கென்யத்தா வரவேற்பு அளித்தார். இருபுறங்களிலும் நின்ற மக்கள் கென்ய மற்றும் அமெரிக்க நாட்டின் கொடியை ஏந்தியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். ஒபாமாவின் வளர்ப்புப் பாட்டியான சாரா, அவரை சந்திக்க நய்ரோபி வந்திருந்தார்.

கென்யாவில் அல்-ஷபாப் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதனல், ஒபாமாவின் வருகைக்காக அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. இவர் கென்ய நாட்டைச் சேர்ந்தவர். மூத்த ஒபாமா, ஹவாய் பல்கலைக்கத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற வெள்ளைக்கார பெண்ணை மனம் முடித்தார். இவர்களுக்குப் பிறந்தவரே அதிபர் ஒபாமா.

ஒபாமாவுக்கு 2 வயதாக இருக்கும்போது ஹவாயிலிருந்து படிப்பை தொடர்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றார் அவரது தந்தை. பின்னர் கென்யாவுக்கு திரும்பிவிட்டார். அதன் பிறகு ஒபாமாவுக்கு 10 வயதான பிறகுதான் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னர் 1982-ல் நிகழ்ந்த கார் விபத்தில் ஒபாமாவின் தந்தை பாரக் இறந்தார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x