

அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களைக் கசியவிட்ட எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என்னும் முடிவில் வெள்ளை மாளிகை தீவிரமாக உள்ளது. மேலும், அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மற்ற நாடுகள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ரகசியங் களை கசியவிட்டவர் முன்னாள் சி.ஐ.ஏ. ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடென். இவர் தற்போது ரஷ்ய அரசின் ஆதரவில் ரஷ்யா வில் தங்கியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப விரும்புவதாக ஸ்னோடென் தெரிவித்திருந்தார்.
"அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினால் அவர் மீதுள்ள குற்றச் சாட்டுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்" என்கிறார் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே கார்னே.
மேலும் அவர், "வரம்பு கடந்து புரிந்துள்ள குற்றங்கள் எல்லாம் மிகவும் தீவிரமானவை. அவை, அமெரிக்கப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளன. பல ஆண்டு முயற்சிகளின் விளை வாக எங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம். தற்போது, ஸ்னோடென் அந்த ரகசியங்களைக் கசியவிட்டதால், எங்களின் எதிரிகளும் தீவிரவாதிகளும் அமெரிக்காவின் அமைதியைச் சீர்குலைக்க வேறு வழிகளில் திட்டம் தீட்டுவதற்கு வாய்ப்பாக அவை அமைந்துள்ளன. ஸ்னோ டென்னுக்கு மன்னிப்பு வழங்க முடியுமா என்பது தெரியாது. மேலும், அதை முடிவு செய்ய வேண் டியது நீதித்துறைதான்" என்றார்.
இந்நிலையில், ஸ்னோடென்னுடன் பரிமாறிக்கொள்ளப் பட்ட மின்னஞ்சல்களை தேசியப் பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) வெளியிட்டுள்ளது. அதில், என்.எஸ்.ஏ.வின் ரகசியங்களை யாருக் கும் ஸ்னோடென் அனுப்ப வில்லை என்று தெரியவந்துள்ளது. எனினும், என்.எஸ்.ஏ. தொடர்ந்து ஸ்னோடென் னின் மின்னஞ்சலைக் கண்காணித்து வரும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்னோடென்னை தேசத் துரோகி என்றும், கோழை என்றும் ஜே கார்னே விமர்சித்தது குறிப்பிடத்தகுந்தது.