அடையாளத்தை மறைக்க லேசர் விளக்கை பயன்படுத்திய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

அடையாளத்தை மறைக்க லேசர் விளக்கை பயன்படுத்திய ஹாங்காங் போராட்டக்காரர்கள்
Updated on
1 min read

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே  நடந்த மோதலில் குழப்பத்தை விளைப்பதற்காக போராட்டக்காரர்கள் லேசர் லைட்டுகளை பயன்படுத்தினர்.

கடந்த மூன்று மாதமாக ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் - போலீஸாருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார். எனினும் 

 குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு  தொடர்ந்து  ஹாங்காங்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் புதன்கிழமை நடந்த போராட்டத்தில், தங்களுடைய அடையாளங்கள் தெரியாமல் இருக்க  போலீஸாருக்கு எதிராக லேசர் லைட்டுகளை பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் பிரகாசமான விளக்குகளையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் போரட்டக்காரர்கள் மீது பயன்படுத்தினர். 

இந்த மோதலில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டது. போரட்டவடிவம் மாறி வருகிறது. போராட்டக்காரர்கள் தங்களை போலீஸார் எந்தவிதத்திலும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக நவீன விஷயங்களை பயன்படுத்துவதன் எதிரொலியாக லேசர் விளக்குகளை போலீஸாருக்கு எதிராக பயன்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in