Published : 28 Jul 2019 04:01 PM
Last Updated : 28 Jul 2019 04:01 PM

ரஷ்ய அதிபரின் ‘திரில்’ அனுபவம்: நீர்மூழ்கிக் கப்பலில் சென்று கடல் அடிப்பரப்பில் இருந்த கப்பலைப் பார்வையிட்டார்

இரண்டாம் உலக போரில் கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கி கப்பலை, ரஷ்ய அதிபர் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டது பெரிய த்ரில் அனுபவமாக இருந்தது என்று அதிபர் புதின் தெரிவித்தார்.

1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் Shch-308 என்ற ரஷ்ய கப்பல் நீரில் மூழ்கியது. இது கடலின் அடிப்பரப்பில் இருப்பதாக எழுந்த செய்திகளை அடுத்து அதிபர் புதின் அதனைப் பார்வையிடத் திட்டமிட்டார். 

ரஷ்யா கடற்படை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிபர் விளாதிமிர் புதின், நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்லாந்து தீவுக்கு படகு மூலம் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் பின்லாந்து வளைகுடா பகுதியை அடைந்த அவர், 50 ஆடி ஆழத்தில் நீரில் மூழ்கி கிடந்த, 2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை கடலின் அடிபரப்புக்கு சென்று பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின் கரைதிரும்பிய புதின்,  ‘ரஷ்ய மக்கள் மற்றும் அவர்களின் பணிகளை நன்கு புரிந்து கொள்ளவே, இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் கடலின் கீழ் பகுதிக்கு சென்றதாக’ தெரிவித்தார். 

-யூரோ நியூஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x