வந்த பிறகு இலவச விசா: இந்தியர்களுக்கு இலங்கை சலுகை அறிவிப்பு

வந்த பிறகு இலவச விசா: இந்தியர்களுக்கு இலங்கை சலுகை அறிவிப்பு
Updated on
1 min read

கொழும்பு 

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வந்து கட்டணமின்றி விசா பெற்றுக் கொள்ளலாம்

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனையின்போது, தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சுற்றுலா வருவாய் அந்நாட்டின் முக்கிய வருவாயாக இருப்பதால் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தாய்லாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பிறகு விமான நிலையத்தில் வைத்து இலவசமாக விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சலுகையை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் இலங்கை வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வந்து கட்டணமின்றி விசா பெற்றுக் கொள்ளலாம். 6 மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in