Published : 22 Jul 2019 04:56 PM
Last Updated : 22 Jul 2019 04:56 PM

சர்ச்சைக்குரிய பகுதிகளில் பாலஸ்தீனர்களின் வீடுகளை இடித்த இஸ்ரேல்

கிழக்கு ஜெருசலேமுக்கு அருகில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் கட்டப்பட்ட பாலஸ்தீனர்களின் வீடுகளை இஸ்ரேல் இடித்துள்ள்ளது. 

வெஸ்ட் பேங்க் பகுதியில்  இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனர்கள் வீடுகள் கட்டியுள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டி இருந்தது. ஆனால் வெஸ்ட் பேங்க் பகுதியில்தான் வீடுகள் கட்டப்படுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இஸ்ரேல் நீதிமன்றம்  அந்நாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததைத் தொடர்பு இரவோடு இரவாக பல வீடுகளை இஸ்ரேல் அரசு வாகனங்களை கொண்டு  இடித்துள்ளது. இதன் காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் வேறு இடத்திற்கு  மாற்றப்பட்டுள்ளனர்.

1967 ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம் மற்றும் வெஸ்ட் பேங்  பகுதியை கைபற்றியது. 

ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது. காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து பல  மாதங்களாகவே பேரணியாகச் சென்று வருகின்றனர்.

இதில் ஏராளமான பாலதீனர்கள் கொல்லப்பட்டனர் . இது தொடர்பான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு  விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x