

சீனாவில் எரிவாயு நிலையத்தில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர். 5 பேர் மாயமாகினர்.
இதுகுறித்து சீனாவின் தேசிய ஊடகம் தரப்பில், “சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள இமா நகரத்திலுள்ள எரிவாயு நிலையத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். 5 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும்பணி நடந்து வருகிறது. 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் 3 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த வீடுகளில் உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 60 பேர் பலியாகினர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
சீனாவில் தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றது.