பாகிஸ்தானில் மதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் மதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க  நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பாகிஸ்தானில் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கி சிந்து மாகாண  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “ பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் தட்டா பகுதியில் பாயல் தேவி ( நுர் பாத்திமா என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்) என்ற இந்துப் பெண் கடந்த மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி மதம் மாறிய இவர் கன்ரான் அலி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத்  திருமணத்தில் அவரது குடும்பத்திற்கு உடன்பாடு இல்லை. இதனைத் தொடர்ந்து அவர், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று  நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில் நுர் பாத்திமாவுக்குப் பாதுகாப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

இதே சிந்து மாகாணத்தில்தான் இரண்டு இளம் பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in