ஜமாத் உத் அவா தலைவர் ஹபீஸ் சயீத் திடீர் கைது: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

ஜமாத் உத் அவா தலைவர் ஹபீஸ் சயீத் திடீர் கைது: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை
Updated on
1 min read

இஸ்லாமாபாத்

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் அவா தீவிரவாத அமைப்பும், அவரது தொண்டு நிறுவனமான பலாஹ் இ இன்சோனியத்தும் ஐநா உத்தரவுபடி தடை செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பு என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் ஹபீஸ் சயீத்தின் இவ்வமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டது. தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால் ஹபீஸ் சயீத் மற்றும் ஜமாத் உத் தவா மீது பாகிஸ்தான் அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. இந்தநிலையில் ஹபீஸ் சயீத் இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

லாகூரில் தங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு தகவல் எதையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in