

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் குழு வன்முறை, கடத்தல், கொலை போன்ற சம்ப வங்கள் அதிகம். கடந்த ஜூன் மாதம் 635 பேர் வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டனர். 1992 வரை அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போர் சமயத்தில்கூட ஒரு மாதத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டதில்லை.
இந்த மாதமும் குற்றங்களுக்குக் குறைவில்லை. புதன்கிழமை, ஓலோகுயில்டா பகுதியில் உள்ள நீர்நிலைகளில் குடிநீர் எடுக்கச் சென்ற மூன்று பேர், அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில், கொல்லப்பட்ட தனது பேரன் கொண்டு சென்ற குடங்கள், அணிந்திருந்த காலணி கள், உடைகளைச் சுமந்தவாறு வேதனையுடன் நடந்துவருகிறார் ஒரு மூதாட்டி.
படம்:ராய்ட்டர்ஸ்