நைஜீரியாவில் இரட்டை குண்டு வெடிப்பு: 118 பேர் பலி

நைஜீரியாவில் இரட்டை குண்டு வெடிப்பு: 118 பேர் பலி
Updated on
1 min read

நைஜீரியாவில் செவ்வாய்கிழமை நடந்த இரட்டை கார் குண்டு வெடிப்பில் 118 பேர் பலியாகினர்.

நைஜீரியாவின் மத்திய நகரான ஜோஸில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கார் குண்டுகள் வெடித்தன. இதில் 118 பேர் உடல் சிதறி பலியாகினர். அந்தப் பகுதியே சடலங்கள் இரைந்து கிடந்ததால் கோரமாக காட்சி அளித்தது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு உடனடியாக எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் வழக்கமாக பொகோ ஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்தும் குண்டு வெடிப்புகள் போலவே நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற பெண் குழந்தைகள் 300 பேரை கடத்திச் சென்றது.

நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மைகாலமாக பொகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in