மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவோம்: இலங்கை பிரதமர் உறுதி

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவோம்: இலங்கை பிரதமர் உறுதி
Updated on
1 min read

இலங்கை தமிழர்களுடன்நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே.

இலங்கை நாடாளுமன்றத்தேர்தல்ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற உள்ளநிலையில்இந்த அறிவிப்பைஅவர் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்பு மாநாட்டில் பேசும்போது அவர் கூறியதாவது:

ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை என்றகட்டமைப்புக்குள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

முந்தைய போர்ப்பகுதிகளில்ராணுவ நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்கள் தேர்தல் முடிந்ததும் உடைமைதாரர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்2009ல் முடிந்ததிலிருந்தே வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று சிறுபான்மை தமிழர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிியன் சிறப்பு மாநாட்டில் முதல்முறையாக கொள்கையை தேர்தலையொட்டி விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார். இந்த மாநாட்டில் ஜனநாயகம், நல்லாட்சி தொடர விரிவான அரசியல் முன்னணியாக இணைந்துசெயல்படுவது அவசியம் என்றதீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

ஜனவரியில் நடந்த அதிபர்தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்குஆதரவுஅளித்தது ஐக்கிய தேசிய கட்சி. இந்நிலையில் ஆகஸ்ட் 17ம் தேதி நடக்கும் தேர்தலில்தமது கட்சியிலிருந்து முன்னாள்அதிபர்மகிந்த ராஜபக்ச பொட்டியிட அனுமதிப்பது என்று சிறிசேனா அறிவித்தார். அதையடுத்தே ஐக்கிய தேசிய கட்சியின் இந்தமாநாடு நடந்துள்ளது.

ராஜபக்ச ஊழலில்திளைத்த தலைவர் என்றுவிமர்சித்துவந்த சிறிசேனா, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மகிந்த ராஜபக்சவின் அனைத்து ஆதரவாளர்களுக்கும் தமது கட்சி டிக்கெட் தரும் என்று ஒப்புக்கொண்டார்.

இது ஐக்கிய தேசிய கட்சியினரையு்ம் சிறிசேனாவின் சிவில் சொசைட்சி கூட்டணியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நல்லாட்சி இலட்சியத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாக இவர்கள் சிறிசேனாவை விமர்சித்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in