

தங்கள் நாட்டு எல்லைப் பகுதி யில் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ் தான் சுட்டு வீழ்த்திய சிறிய உளவு விமானம் இந்தியாவுடையது அல்ல. அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற விவரத்தை சீன அரசு ஊடகம் நேற்று வெளியிட்டது. இந்த தகவல் பாகிஸ்தானை மிரள வைத்துள்ளது.
இந்தியாவின் உளவு விமானம் என்று கூறி பாகிஸ்தான் அதை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் இது சீனாவில் தயாரான டிஐேஐ பான்டம் 3 டுரோன் விமானம் என்று ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் “பீப்பிள்ஸ் டெய்லி” தெரிவித்து ள்ளது.
ஷாங்காயில் வெளியாகும் அப்சர்வர் இணையதளம், தான் வெளியிட்ட தகவலில் இந்த டுரோன் மிக புத்திசாலித்தனமாக இயங்கக்கூடியது, சக்திமிக்கது, என்று வர்ணித்துள்ளது.
இஸ்லாமாபாத், பெய்ஜிங் இடையே, நெருக்கமான உறவு இருக்கும் நிலையில் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய விமானம் சீனாவின் தயாரிப்பு என்பது உறுதியாக தெரியவந்துள்ளதால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.