ரிங்டோன், காலர் டியூன்களில் இந்திய திரைப்பட பாடல் கூடாது‌: வங்கதேச நீதிமன்றம் தடை

ரிங்டோன், காலர் டியூன்களில் இந்திய திரைப்பட பாடல் கூடாது‌: வங்கதேச நீதிமன்றம் தடை
Updated on
1 min read

இந்தியத் திரைப்படப் பாடல்களை கைப்பேசிகளில் ரிங்டோன், காலர் டியூனாக வைத்துக்கொள்ள வங்கதேசத்தில் உள்ள உயர் நீதி மன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.

இந்திய திரைப்படப் பாடல்களை ரிங்டோன், காலர் டியூனாக வைத்துக்கொள்வதை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு நேற்று விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விளக்க மளிக்க கலாச்சாரம், தகவல் தொடர்பு, உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்கள் மற்றும் நாட் டில் செயல்படும் அனைத்து கைப் பேசி சேவை நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மனுதாரரின் வழக்கறிஞர் மெஹ்தி ஹசன் சவுத்ரி கூறும்போது, "வங்கதேசத்தில் இந்தியத் திரைப்படங்களை இறக்கு மதி செய்வதை இந்நாட்டின் இறக்கு மதி கொள்கைகள் தடை செய்துள்ளன. அதனால் தான் இங்கு இந்தியத் திரைப்படப் பாடல்களை ரிங்டோன், காலர் டியூனாக பயன்படுத்த முடியாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in