

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி புறப்பட்ட நவாஸ் ஷெரீப், 'சமாதான செய்தியுடன்' இந்தியா செல்வதாக செய்தியாள்ர்களிடம் தெரிவித்தார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க லாகூரிலிருந்து புறப்படும்போது, செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்: இந்தியாவிற்கு 'சமாதான செய்தியுடன்' செல்கிறேன். பாகிஸ்தான் இந்தியாவுடனான சுமூகமான உறவை தொடர விரும்புகிறது என்றார்.
மேலும், பேச்சுவார்த்தையுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்படும்” என்றார்.
நாட்டின் பிரதமராக இன்று மாலை பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது மனைவி குல்சூம் நவாஸ் மற்றும் அவரது மகன் ஹுசேன் நவாஸுடன் இந்தியா வந்தடைந்தார். அவர்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர்தூதர் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சுதந்திரத்துக்கு பின்னர் 3 முறை இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று, இரு நாடுகளும் அணு ஆயுத போட்டி நாடுகளாகி உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.