

அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஆகியோரின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘தி சவுத்சைடு வித் யு’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியானது.
1989-ம் ஆண்டு, ஒபாமா, மிஷெலுடன் முதன்முதலில் டேட்டிங் சென்ற நாளை மையப் படுத்தி இப்படம் உருவாகி யுள்ளது. ஏ டே டு ரிமம்பர்- தி சவுத் சைடு வித் யு என்ற இப்படத்தில், ஒபாமாவாக பார்க்கர் சாயர்ஸ் நடித்துள்ளார். டிகா சம்ப்டெர் மிஷெல் ராபின்சனாக நடித்துள்ளார். ரிச்சர்டு டன்னே எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பார்க்கர் சாயர்ஸ் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
மிஷெலை கவர்வதற்கு உதவிய இயக்குநருக்கு ஒபாமா வீடியோ மூலம் நன்றி தெரிவித் துள்ளார்.