

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப் பட்ட ஸ்லோவ்யான்ஸ்க் நகரை மீட்கும் நோக்கத்தில், உக்ரைன் ராணுவம் வெள்ளிக்கிழமை அதி காலையில் அதிரடித் தாக்குதல் நடத்தியது.
அண்மைக் காலத்தில் கிளர்ச்சி யாளர்கள் மீது ராணுவம் நடத்திய பெரும் தாக்குதல் இதுவாகும். இதில், 3 பேர் உயிரிழந்தனர்.
சூர்யோதயத்துக்கு முன்பே உக்ரைன் ராணுவம் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. இதில், ஸ்லோவ்யான்ஸ்க் நகருக்குச் செல்லும் சில பாதைகளை ராணுவம் கைப்பற்றியது. உக்ரைன் ராணுவத்தின் இரு ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதர வுப் படையினர் சுட்டு வீழ்த்தியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
உக்ரைன் உள்துறை அமைச் சர் அவகோவ் இதனை உறுதிப் படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ரஷ்ய ஆதரவுப் படைகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின. இருப்பினும், ஸ்லோவ்யான்ஸ்க் நகரைச் சுற்றி யுள்ள 9 சாலைகளின் சோதனைச் சாவடிகளை உக்ரைன் ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது” என்றார்.
அதேசமயம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தரப் பில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். உக்ரைன் படைகள் ஸ்லோவ் யான்ஸ்க் நகருக்குள் படையெடுத் திருப்பதை, ரஷ்ய ஆதரவு படைகளின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் விளாதிஸ்லேவ் தெரிவித்தார். நகரின் பல பகுதிகளில் சண்டை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்லோவ் யான்ஸ்க் நகரம், ஆயுதமேந்திய குடிமக்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
தகர்ந்த நம்பிக்கை
“உக்ரைனின் இத்தாக்குதல், ஜெனீவா ஒப்பந்தத்தை நிறை வேற்றும் முயற்சியின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்து விட்டது” என, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், “ஸ்லோவ் யான்ஸ்க் நகரில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ராணுவ பார்வையாளர்களை பேச்சுவார்த்தை மூலம் மீட்பதற்காக, ரஷ்யா அங்கு விளாதிமிர் லூகின் என்ற தூதரை அனுப்பியுள்ளது. உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதால், தூதரைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அதே சமயம் தூதர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளோம்” என்றார்.
உக்ரைன் தன் ராணுவத்தை கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியி லிருந்து திரும்பப் பெற வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி இருந்தது. மேலும், உக்ரைன் எல்லையில் படைகளை நிலைநிறுத்தியுள்ள ரஷ்யா, கிழக்கில் ஊடுருவி யுள்ளவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தை அனுப்பக் கூடாது என எச்சரித்தது.
இந்நிலையில், ஸ்லோவ் யான்ஸ்க் நகரைக் கைப்பற்ற உக்ரைன் ராணுவத் தாக்குதல் தொடுத்துள்ளது.