ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்ய முடியாது: பாகிஸ்தான் பிடிவாதம்

ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்ய முடியாது: பாகிஸ்தான் பிடிவாதம்
Updated on
1 min read

2008 மும்பை தாக்குதல் சம்பவத் தில் மூளையாக செயல்பட்ட, ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்ய முடியாது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்புடனோ அல்லது பயங்கரவாத செயல்களிலோ அவருக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தில் கேள்வி நேரத்தின்போது, உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கானுக்கு பதிலாக, எல்லைப்புற பகுதி இணை அமைச்சரும் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான அப்துல் காதிர் பலோச் பதில் அளித்தார்.

அவர் கூறும்போது, “தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் ஜமாத் உத் தவா என்ற பெயரில் செயல்படுவதாக ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு ஆதாரங்களும் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட த்தின் (ஏடிஏ) கீழ் ஜமாத் உத் தவா அமைப்பை கடந்த 2003, நவம்பர் 15 முதல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் பயங்கர வாத செயல்களுடன் இந்த அமைப் புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே இதை தடை செய்ய முடியும்.

அறக்கட்டளை மற்றும் சமூகப் பணிகளில் ஜமாத் உத் தவா ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மதக் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

2008 - 2010 ஆண்டுகளுக்கு இடையில் ஜமாத் உத் தவா அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனால் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் அமைப்புகள் வேறு பெயரில் செயல்படவோ அல்லது அறப்பணிகளில் ஈடுபடவோ அனுமதிப்பதில்லை.

தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புக்கு பதிலாக தொடங்கப்பட்ட இரு அறக்கட்டளைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது” என்றார்.

ஃபலாஹ் இ இன்சானியத் பவுன்டேஷன் (எப்ஐஎப்) என்ற அமைப்புக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது என்ற கூறிய பலோச், இந்த அமைப்பு அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ளதா என தெரிவிக்கவில்லை.

ஐ.நா.வின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ஜமாத் உத் தவா இடம்பெற்றுள்ளது. இதன் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு எதிராக அமெரிக்கா 1 கோடி டாலர் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. என்றாலும் ஜமாத் உத் தவா பாகிஸ் தானில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in