இந்தியாவில் ஹெச்ஐவி 20 சதவீதம் குறைந்தது: ஐ.நா. அறிக்கையில் தகவல்

இந்தியாவில் ஹெச்ஐவி 20 சதவீதம் குறைந்தது: ஐ.நா. அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

“இந்தியாவில் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலகில் இருந்து எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. இதைத் தடுக்க உலக சுகாதார நிறு வனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் தீவிர விழிப்புணர்வு பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ‘எய்ட்ஸ் எப்படி எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது’ என்ற தலைப் பில் அறிக்கை ஒன்றை ஐ.நா. நேற்றுமுன்தினம் வெளியிட் டுள்ளது.

அதில், “புதிதாக ஹெச்ஐவி வைரஸால் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை உலகளவில் 35 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் எய்ட்ஸ் தொடர்பான இறப்பு 41 சதவீதம் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியதாவது:

எய்ட்ஸை ஒழிக்க வேண் டும் என்ற ஐ.நா.வின் பிரச் சாரத்துக்கு உலக நாடுகள் செவிசாய்த்து செயலாற்றி உள்ளன. 1.5 கோடி பேருக்கு ஹெச்ஐவி பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இது எய்ட்ஸ் இல்லாத புதிய சமுதாயத்தை நோக்கி உலகம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.

மேலும், ஹெச்ஐவி பாதித்த கர்ப்பிணிகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கி தரப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கை தரத்தையும் அவர்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை யும் உறுதிப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்த வரை ஹெச்ஐவி ஒழிப்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுக்குள் புதிதாக ஹெச்ஐவியால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in