Last Updated : 27 Jul, 2015 06:00 PM

 

Published : 27 Jul 2015 06:00 PM
Last Updated : 27 Jul 2015 06:00 PM

ட்விட்டரில் பயங்கரவாத தகவல்கள் பரவுவது எப்படி?

தனிமைப்படுத்தப்பட்ட, மற்றவர்களுடன் முரண்பட்ட நிலையில் இருக்கும் நபர்கள், வழக்கமான, மரபான பரப்புரைகளை விட புகைப்படங்கள், வீடியோ படங்களுக்கு அதிகம் இரையாகின்றனர்.

சமூக ஊடகங்களில் வைரலாக இருக்கும் தீவிரவாதக் குழுக்களின் தகவல் பரவல்களை வைத்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை ஆராய்ச்சி செய்த ஆய்வுக் குழுவினர், ஒரு செய்தி எவ்வாறு உலகின் பல்வேறு இடங்களுக்குப் பரப்பப்படுகிறது என்பதனைக் கண்டறிந்தனர்.

அரிஸோனா பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினரின் ஆராய்ச்சி பின்வரும் கூற்றுகளை முன்வைக்கிறது.

வன்முறையைத் தூண்டும் இணையைப் பக்கங்களையும், அவைகளின் கருத்துக்களையும் முடக்க, இன்னும் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள், சமூகத்திலிருந்து அன்னியமாகிப்போன, தனிமைப்படுத்தப்பட்ட மக்களைக் குறிவைக்கின்றன. மேற்கத்திய நாடுகள்தான் அவர்களின் முக்கிய பயங்கரவாத இலக்கு.

ஏராளமான தனிநபர்கள், இதுபோன்ற தகவல்களை உலகம் முழுக்கப் பரப்புவதற்காகவே காத்திருக்கின்றனர். இதனால் அவற்றைப் பார்க்கும் மக்களின் மனநிலையையும், குணங்களையும் வெகுவாக பாதிக்கின்றன.

ஒரு ட்வீட், பல்வேறு பின்னணிகளில் இருக்கும் 50 நபர்களை ஒரே நேரத்தில் சென்றடையும்போது, பல்கிப் பெருகி வைரலாக வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x