பிரிட்டன் பல்கலை.யில் திரையிட 6 தமிழ்ப் படங்கள் தேர்வு

பிரிட்டன் பல்கலை.யில் திரையிட 6 தமிழ்ப் படங்கள் தேர்வு
Updated on
1 min read

பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் தென்னிந்திய திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக சுட்ட கதை, விடியும் முன், நீதானே என் பொன்வசந்தம், நீர்ப்பறவை உள்ளிட்ட 6 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

பிரிட்டனில் உள்ள போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில், தென்னிந்திய திரைப்பட விழா வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஒரு பகுதியாக ஜூன் 6 முதல் 8-ம் தேதி வரை சுட்டகதை, விடியும் முன், நீதானே என் பொன்வசந்தம், நேரம், முதல் முதல் முதல் வரை, நீர்ப்பறவை ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.

இது குறித்து திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் சாக்‌ஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனித்தன்மையுடம் இந்திய திரைப்படங்களை உலகளவில் இருக்கும் பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

தெற்கு ஆசிய நாடுகளின் திரைப்படங்கள் நீண்ட காலமாக கிழக்கு நாடுகளில் குறிப்பிடும் வகையில் பிரபலமடையவில்லை.

இதற்காக துடிப்பான திரைப்படங்களை விழாவிற்காக தேர்வு செய்துள்ளோம்.

நகைச்சுவை, காதல், இசை, இயல்பு என பல்வேறு உணர்ச்சிகளை பகிரும் படங்களை திரைப்பட பிரியர்களுக்காக எங்கள் மாணவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு துணை உரையாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 200 இந்திய திரைப்படங்கள் இந்த விழாவில் இடம்பெற உள்ளன. இந்த விழா தென் இந்திய திரைப்படங்களுடன் உள்ள இடைவெளியை குறைக்கவம் கலாச்சார பகிர்வையும் ஏற்படுத்தும்" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in