

புளூட்டோ கோளில் இதய வடிவிலான பிரகாசமான பகுதி ஒன்றை நாசாவின் 'நியூ ஹரைசன்' விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இது சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்குப் பரந்துள்ளது.
ஒன்பது ஆண்டுகள் முந்நூறு கோடி ஆண்டுகள் பயணித்து புளூட்டோவை அடைந்திருக்கும் அந்த விண்கலம் சமீபகாலங்களில் அந்த சிறுகோளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று அந்த விண்கலத்தில் உள்ள 'லாங் ரேஞ்ச் ரெக்கொனெசென்ஸ் இமேஜர்' எனும் கருவி மூலம் புகைப்படம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் பெற்றனர்.
கடந்த 7ம் தேதி சுமார் 80 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இதய வடிவிலான பகுதி மூன்று பக்கங்களில் இருந்து மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது எனவும், வரும் 14ம் தேதி அந்த விண்கலம் அந்தப் பகுதியை நோக்கி இன்னும் நெருக்கமாகச் செல்லும்போது 500 மடங்கு துல்லியமான புகைப்படம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.