

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் கென்னடி பதால்கா விண்வெளியில் அதிக நாட்கள் இருந்து சாதனை படைத்துள்ளார்.
இப்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக உள்ள அவர், இதுவரை 803 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். அவருக்கு வயது 57.
முந்தைய சோவியத் யூனியனில் ராணுவ பைலட்டாக தனது பறக்கும் பணியைத் தொடங்கிய அவர், 1998-ம் ஆண்டு முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார்.
இப்போது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அவர் வரும் செப்டம்பரில் பூமி திரும்பு இருக்கிறார். அப்போது விண்வெளியில் 2.5 ஆண்டுகள் இருந்த சாதனையை அவர் படைப்பார்.