

புளூட்டோவை வெற்றிகரமாக நெருங்கிய நியூஹாரிஸான்ஸ் விண்கலம், அங்கிருந்து பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் உள்ள புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்ய, நாசா கடந்த 2006-ம் ஆண்டு நியூ ஹாரிஸான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. புளூட்டோ கிரகத்தை கிரகம் என்ற நிலையிலிருந்து மாற்றி, குறுங்கோள் என விஞ்ஞானிகள் கடந்த 2006-ம் ஆண்டு அறிவித்தனர்.
புளூட்டோவின் அளவு குறித்து மாறுபட்ட கருதுகோள்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நாசா அனுப்பிய ஹாரிஸான்ஸ் விண்கலம் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் புளூட்டோவுக்கு மிக அருகில் அதாவது புளூட்டோவில் இருந்து 12,500 கி.மீ. தொலைவில் அதனைக் கடந்து பயணம் செய்தது. இந்திய நேரப்படி நேற்றுமுன்தினம் மாலை கிரகத்தின் அளவு 5.19 மணிக்கு அதன் நெருக்கமான பாதையைச் சென்றடைந்தது நியூ ஹாரிஸான்ஸ்.
புளூட்டோவை அடைந்து விட்டா லும், நியூஹாரிஸான்ஸ் விண்கல திட்டம் வெற்றியடைந்து விட்டதை உறுதி செய்யாமல், கொண்டாட்டங் களில் ஈடுபடாமல் விஞ்ஞானிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில், அங்கிருந்து சமிக்ஞைகளை நியூஹாரிஸான்ஸ் அனுப்பியுள்ளது. சுமார் 21 மணி நேர காத்திருப்புக்குப் பின், நியூ ஹாரிஸான்ஸ் அனுப்பிய சமிக்ஞை களால் இத்திட்டத்தின் வெற்றியை விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, நாசா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புளூட்டோவை அடைந்ததும், சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்பு வதை நியூஹாரிஸான்ஸ் நிறுத்தி விட்டு, தனது ஆன்டெனாக்களை புளூட்டோ கிரகத்தை நோக்கி திருப்பிவிட்டது. 13 மணி நேரத்துக் குப் பிறகே சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியது.
விண்கலம், தனது இலக்கை அடைந்து வெற்றிகரமாகக் கடந் திருப்பதையே அதன் சமிக்ஞை கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது, புளூட்டோ குறித்த தரவு கள், ஏரளமான அதி துல்லிய படங் களையும் அனுப்பத் தொடங்கி யுள்ளது நியூஹாரிஸான்ஸ்.
நாசா நிர்வாகி சார்ல்ஸ் போல்டன் கூறும்போதும், “இது அறிவியலுக்குக் கிடைத்த வரலாற் றுச் சிறப்பு மிக்க வெற்றி. மனிதனின் திறமையை மேலும் ஒருமுறை நாம் நிரூபித்திருக்கிறோம்” என்றார்.
புளூட்டோவுக்கு அருகில் பறக்கும், மனிதனால் உருவாக்கப் பட்ட முதல் விண்கலம் நியூ ஹாரிஸான்ஸ் என்பது குறிப் பிடத்தக்கது. 5 கோடி கிலோமீட்டர் தொலைவை 9 ஆண்டுகள் பயணித்து புளூட்டோவை நெருங் கியுள்ளது நியூ ஹாரிஸான்ஸ்.
இந்த விண்கலம் அனுப்பும் புகைப்படங்களால், புளூட்டோ வின் இதுவரை அறியப்படாத பரிமாணங்கள் தெரிய வரும் என விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புளூட்டோ தவிர அதன் 5 நிலவுகளையும் படம் பிடித்து அனுப்ப உள்ளது நியூஹாரிஸான்ஸ்.