

ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முதல்முறையாக பெண் நீதிபதியை நியமனம் செய்ய அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பரிந்துரை செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முதல்முறையாக அனிஷா ரசோலி என்ற பெண் நீதிபதியை நியமனம் செய்ய அதிபர் அஷ்ரப் கனி நேற்று பரிந்துரை செய்தார்.
இதுகுறித்து அஷ்ரப் கூறிய போது, ஆப்கானிஸ்தான் நீதித் துறை வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதி ஒருவர் பதவியேற்க உள்ளார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. எதிர்ப்புகளை மீறி பெண் நீதிபதி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
அதிபரின் பரிந்துரைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் அனிஸ் நீதிபதியாக பதவியேற்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.