

வடக்கு பாகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில், நிலத்தில் 26 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் அப்போட் டாபாத் புறநகர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழந்த சம்பவத்தில், 25 மற்றும் 48 வயது கொண்ட 2 பெண்களும், 9 வயது சிறுவனும் உயிரிழந்தாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவத்தில் 6 வயது சிறுமியும் காய மடைந்தார்.
கிழக்கு பஞ்சாப், கைபர் பக்துன்கவா மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித் தனர். நேற்று அதிகாலை 1.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக் கத்தில் கட்டிடங்கள், வாகனங்கள் குலுங்கியதாக இஸ்லாமாபாத் மக்கள் தெரிவித்தனர்.
காஷ்மீரிலும் நிலநடுக்கம்
இதனிடையே காஷ்மீரில் நேற்று அதிகாலை 2.29 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கத்தில் உயிரிழப்போ அல்லது உடைமைகளுக்கு சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
கன மழைக்கு 24 பேர் பலி
இதனிடையே பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு மேலும் 24 பேர் பலியாகியுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “கைபர் பக்துன்கவா மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த சிட்ரால் பகுதியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 24 உடல்கள் மீட்கப்பட்டன” என்றார்.
இதன் மூலம் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளத்தில் பலியா னோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
பஞ்சாபில் மட்டும் வெள் ளத்தில் 2 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கிய பருவமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.