

மலேரியாவை தடுப்பதற்கான மிக முக்கியமான புரத கைனேஸ் நொதியை இந்திய விஞ்ஞானி கண்டறிந்துள்ளார். இது மலேரியாவுக்கு புதிய சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டாகா பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி மகமூத் ஆலம். இவரும், லீசெஸ்டர் பல்கலைக்கழக டாக்ஸிகாலஜி பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் லண்டன் ஹைஜீன் மற்றும் டிராபிக்கல் மெடிசன் பள்ளி ஆய்வாளர்கள் இணைந்து, முக்கியமான புரத கைனேஸ் நொதியைக் கண்டறிந்துள்ளனர்.
அந்த புரத கைனேஸ் நொதியைத் தூண்டுவதன் மூலம் மலேரியாவைத் தடுக்க முடியும்.
மகமூத் ஆலம் ராஞ்சியில் உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) படித்தார். பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படித்தார்.