

நைஜீரியாவில் உள்ள மசூதி மற்றும் அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள், பெண்கள் என சுமார் 150 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
நைஜீரியாவில் போகோ ஹராம் வசம் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகிரியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் வெறிச் செயலில் ஈடுபட்டனர்.
3 சிறிய கிராமங்களை குறிவைத்து வீடு வீடாக சென்று தீ வைத்த அவர்கள், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள், குழந்தைகள் என சுமார் 150 பேரை சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், "மைதுகிரியின் குகாவா கிராமத்தில் உள்ள மசூதி மற்றும் அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 97 பேர் பலியாகினர்.
பலியானவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. படு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்தடுத்த கிராமங்களிலும் இதே செயலில் அவர்கள் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அவர்களிமிருந்து தப்பித்து ஓடினர்" என்றனர்.