Last Updated : 04 Jul, 2015 10:36 AM

 

Published : 04 Jul 2015 10:36 AM
Last Updated : 04 Jul 2015 10:36 AM

சீனாவில் நிலநடுக்கத்தால் 6 பேர் பலி: பிலிப்பைன்ஸையும் விட்டுவைக்கவில்லை

சீனாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பொதுமக்கள் உயிர் பிழைப் பதற்காக பாதுகாப்பான இடங் களை தேடி ஓடினர்.

இடிபாடுகளில் இருந்து இது வரை 6 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. 48 பேர் படு காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டி ருந்தது. சுமார் 3 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகிவிட்டன. அப்பகுதியில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து 3.0 மற்றும் 4.6 என்ற ரிக்டர் அளவுகளில் பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்து தெருக்களிலேயே தங்கியுள்ளனர்.

பிலிப்பைன்ஸிலும் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நேற்று 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நாட்டின் தென்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. உயிரிழப்பு, சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் இடங்களில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x